கேஜிஎஃப் -3 படத்தின் வது பாகம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ஏப்ரல் 14 ஆம் தேதி கேஜிஎஃப் சாப்டர் 2 ரிலீசானது.
பீரியட் ஆக்சன் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது.
தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமான கே ஜிஎஃப்-2 படத்தின் முதல் நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை கே.ஜி.எஃப் படக்குழு அறிவித்தனர்.
அதில், நேற்று ஒரு நாள் இந்தியா முழுவதும் ரூ .134.5 கோடிக்கு வசூல் குவித்துள்ளததாக ஒரு போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.
இ ந்நிலையில், கே ஜிஎஃப்-2 படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பதற்குள் கே ஜிஎஃப்- 3 வது பாகம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.