Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

100 % தமிழ்… ஒரு நாளைக்கு ஒரு ரூபா… சிம்பு நடிப்பில் பிரபல ஓடிடி நிறுவனத்தின் வைரல் வீடியோ!

Advertiesment
100 % தமிழ்… ஒரு நாளைக்கு ஒரு ரூபா… சிம்பு நடிப்பில் பிரபல ஓடிடி நிறுவனத்தின் வைரல் வீடியோ!
, சனி, 16 ஏப்ரல் 2022 (13:15 IST)
தமிழில் கால்பதித்துள்ள ஆஹா ஓடிடி அடுத்தடுத்து பல படங்களை வாங்கி வெளியிட உள்ளது.

கொரோனா காலகட்டத்தில் தமிழ் சினிமாவை பெருமளவுக் காப்பாற்றியது ஓடிடி நிறுவனங்கள்தான். இப்போது ஓடிடி உரிமை படத்தின் வியாபாரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது. இந்தியாவில் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற உலகளாவிய ஓடிடி நிறுவனங்கள் பெரும் மார்க்கெட்டை வைத்திருந்தாலும், சோனி லிவ், ஜி 5 போன்ற இந்திய அளவிலான ஓடிடி நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவு வாடிக்கையாளர்களை வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாக்களை இலக்காக கொண்டு நடிகர் அல்லு அர்ஜுனின் குடும்பம் தொடங்கிய ஓடிடி நிறுவனம்தான் ஆஹா. இப்போது ஆஹா தமிழ் என்ற பெயரில் தமிழ் சினிமாவிலும் கால்பதிக்கிறது. இந்த நிறுவனத்தின் அறிமுக விழா சமீபத்தில் நடந்தது. அதில் முன்னணி நடிகர்கள் பலர் கலந்துகொண்ட நிலையில் சிம்புவும் கலந்துகொண்டார். மேலும் அந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸ்டராகவும் சிம்பு நியமிக்கப்பட்டுள்ளார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சிம்பு அந்த நிறுவனத்துக்காக நடித்துள்ள விளம்பரப் படம் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த விளம்பரத்தில் “ஆஹா தளம் முழுக்க முழுக்க தமிழ் சினிமாக்கள் மற்றும் வெப் தொடர்களுக்காகவே உருவாக்கப்படுவதாகவும், ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் வீதம் ஆண்டுக்கு 365 ரூபாய் மட்டுமே சந்தா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது”. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகுமார் வீட்டுக்குப் போனா டீ, காபி கிடைக்காது… மலரும் நினைவுகளைப் பகிர்ந்த விஜயகுமார்!