Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 3 April 2025
webdunia

மகனால் சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை !

Advertiesment
The test. superstar
, சனி, 9 அக்டோபர் 2021 (15:10 IST)
போதைப் பொருள் விவகாரத்தில் கைதாகிச் சிறையில் உள்ள மகன ஆர்யன் கானால் சூப்பர் ஸ்டாr ஷாருக்கானுக்கு விளம்பர வாய்ப்புகள் பறிபோயுள்ளதாகத் தெரிகிறது,

சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் 18 பேரைக் கைது செய்து அக்டோபர் 7 வரை நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

இந்நிலையில் இன்று, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான்கான் உள்ளிட்ட 3 பேரை மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர். இதையடுத்து மீண்டு அவர்களை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை நேற்று மும்பை நீதிமன்றத்தில் நடந்தது. இதில், ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் மிகப்பெரிய ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸின் நீண்டநாள் விளம்பர தூதராகவும் அம்பாசிடராகவும் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இருந்து வரும் நிலையில் அவரால் அந்நிறுவனம் வளர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்பட்டது, இதனால் அவருக்கு வருடம் தோறும் ரூ. 4 கோடி சம்பளம் கொடுக்கப்படு வந்தது. ஆனால் ஆர்யன் கான் விவகாரத்தில் ஷாருக்கான் நடித்துள்ள விளம்பரங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடைகளை வென்று முன்னேறுவது யார்...? புதிய பார்முலா சொன்ன கமல்!