சினிமா டைரக்டர் ஆகனும்னு வந்தவரின் நிலைமை.... உருகவைக்கும் கண்ணீர் கதை !

வியாழன், 27 பிப்ரவரி 2020 (18:45 IST)
சினிமா டைரக்டர் ஆகனும்னு வந்தவரின் நிலைமை.... கண்ணீர் கதை !

மறைந்த நடிகர் குணால், மோனல் நடித்து வெளியான படம் ’பார்வை ஒன்றே போதுமே’. இப்படத்தின் சூப்பர் ஹிட் பாடல்கள் இப்போது கேட்டாலும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். படமும் பக்கா ஹிட். இப்படத்தின் உதவி இயக்குநராக பணியாற்றியவர்  சில நாட்களாகக் காணாமல் போகவே நண்பர்கள் உறவினர்கள் அவரைத் தேடிக் கொண்டிருந்தனர். 
 
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் சென்னை வடபழனியில் உள்ள  சாலையோரமாக நின்று அவர், கந்தல் ஆடையில், சிக்குப் பிடித்த முடியுடன்,  ஒரு பேப்பரில் எதையோ எழுதிக் கொண்டிருந்திருக்கிறார்.
 
அதைப் பார்த்த ஒருவர், அதை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்தப் போட்டோ வைரலானது.
 
அதன் பின் அவரைத் தேடிச் சென்றபோதுதான் உண்மை தெரிந்தது. குருநாதனை அடையாளம் கண்டுகொண்ட அவரது நண்பரான வேல்முருகன் அவரை மீட்டுள்ளார்.
 
இதில், முக்கியமாக, வேல்முருகன் கூறியுள்ளதாவது: குருநாதன், எனது 'கதைகளை திருவிட்டார்கள்' என்று கூறிக் கொண்டே இருக்கிறான் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் டாக்டர் படத்தில் இணைந்த ஜீ தமிழ் பிரபலம் அர்ச்சனாவின் மகள்!