Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல்ஹாசனுக்கு பதில் சொன்ன லைகா! – இந்தியன் 2 விவகாரம்!

Advertiesment
கமல்ஹாசனுக்கு பதில் சொன்ன லைகா! – இந்தியன் 2 விவகாரம்!
, வியாழன், 27 பிப்ரவரி 2020 (11:43 IST)
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கமல்ஹாசன் எழுதிய கடிதத்துக்கு லைகா நிறுவனம் பதிலளித்துள்ளது.

கடந்த வாரம் சென்னையில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்த போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படப்பணிகளை லைகா மீண்டும் தொடங்க இருக்கும் சமயத்தில் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த வேண்டும் என கமல்ஹாசன் கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள லைகா நிறுவனம் ”எங்கள் நிறுவனம் உலக தரமான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை அம்சங்களை கொண்ட நிறுவனம். இந்தியன் 2 படத்தின்போது நிகழ்ந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது. எனினும் அந்த படப்பிடிப்பிலும் லைகா எந்த குறையும் இல்லாத அளவிலேயே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தோம். எனினும் இனி பாதுகாப்பு ஏற்பாடுகளில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளப்படும்” என பதில் அளித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் மேன் வெர்சஸ் வைல்ட் – ரிலீஸ் தேதி அறிவிப்பு!