கிரிக்கெட் அணிக்கு உரிமையாளராக மாறிய விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர்

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (23:20 IST)
கடந்த ஆண்டு அதிக வெற்றி படங்களை கொடுத்த கோலிவுட் நடிகர் விஜய்சேதுபதிதான். இந்த ஆண்டும் அவர் நடித்த சுமார் 10 படங்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடிப்பில் இம்மாதம் வெளிவரவுள்ள திரைப்படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்லு' திரைப்படம். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர கலைவிழாவின்போது வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த கலைவிழாவில் நடைபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளில் ஒன்றாகிய ராம்நாட் ரினோஸ் என்ற அணியை ஒரு நல்ல நாள் பாத்து சொல்லு' படத்தின் தயாரிப்பாளர் விலைக்கு வாங்கியுள்ளார். இந்த அணியின் கேப்டன் விஜய்சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்சேதுபதி நடித்த படத்தின் புரமோஷனுக்காக இந்த அணியை தயாரிப்பாளர் வாங்கியதாக கூறப்படுகிறது.

முதன்முதலாக விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்த்ஹில் காயத்ரி, நிஹாரிகா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments