மணிரத்னம் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் விஜய் சேதுபதி, ஜோதிகா, சிம்பு, ஃபகத் பாசில், அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் நடிக்கிறார்கள். சிம்பு, விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா உட்பட பலருக்கு இந்தப் படம் தான் மணிரத்னம் இயக்கத்தில் முதல் படம்.
இந்தப் படத்தில் சிம்பு, அரவிந்த் சாமி, ஃபகத் பாசில் ஆகிய மூவருக்கும் அப்பாவாக பிரகாஷ் ராஜும் அம்மாவாக ஜெயசுதாவும் நடிக்கிறார்களாம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் ரோல்தனாம். விஜய் சேதுபதி போலீஸாக நடித்த 'சேதுபதி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மணிரத்னம் படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கும் இப்படத்தில் அவரது ரோல் பேசப்படுமா?
இயக்குநர் மணிரத்னமே தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வரும் 2018 ஜனவரியில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மணிரத்னம் இயக்கும் படத்தின் டைட்டிலுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ள நிலையில், படத்தின் தலைப்பு எப்போது வெளிவரும் என்பதுதான் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.