Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் ரிலீசில் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் ஏற்பட்டுள்ள திடீர் சிக்கல்

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (22:39 IST)
சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் விக்ரம் நடித்த 'ஸ்கெட்ச்' ஆகிய இரு படங்களும் வரும் பொங்கல் தினத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு படங்களும் வரும் 12ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது

இந்த நிலையில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் நேற்று தணிக்கை செய்யப்பட்டு 'யூஏ' சான்றிதழ் பெற்றது. அதேபோல் இன்று விக்ரமின் 'ஸ்கெட்ச்' திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு அதே 'யூஏ' சான்றிதழை பெற்றுள்ளது.

'யூஏ' சான்றிதழ் என்பதால் சிறுவர்கள் தனியாக படம் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். பெற்றோர்கள் அல்லது பெரியோர்களுடன் தான் இந்த படத்தை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சூர்யா மற்றும் விக்ரம் ஆகிய இருவருக்குமே பள்ளி மாணவர்கள் அதிகம் ரசிகர்களாக இருக்கும் நிலையில் தணிக்கை சான்றிதழ் காரணமாக அவர்கள் தனியாக சென்று இந்த இரு படங்களையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இரு நடிகர்களுக்கும் இதுவொரு பின்னடைவாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments