Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'தி லெஜண்ட்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

legend
, செவ்வாய், 28 ஜூன் 2022 (12:42 IST)
சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள  'தி லெஜண்ட்' படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் மற்றும் ஊர்வசி ரெளட்டாலா நடிப்பில் உருவான திரைப்படம் தி லெஜன்ட். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த படம் ஜூலையில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது ஜூலை 15ஆம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ வெற்றி… உதயநிதிக்கு பரிசளித்த தயாரிப்பாளர் லலித்!