Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெளியானது ‘தி லெஜண்ட்’ படத்தின் கலர்புல் டிரைலர்

வெளியானது ‘தி லெஜண்ட்’ படத்தின் கலர்புல் டிரைலர்
, திங்கள், 30 மே 2022 (09:17 IST)
அருள் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி லெஜெண்ட்’ படத்தின் பாடல் மற்றும் டிரைலர் நேற்று வெளியானது.

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த ’தி லெஜண்ட்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

வேல்ராஜ் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் சரவணன் ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதையடுத்து இணையத்தில் வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தின் டிரைலர் கவனத்தை ஈர்த்துள்ளது.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர் மன்ற செயலாளர் உயிரிழப்பு: நேரில் இரங்கல் தெரிவித்த சூர்ய!