கேரள சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் பாரீஸ் சந்திரன். இவ்ர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	கேரள சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர்  பாரீஸ் சந்திரன்(66). இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படவே  கோழிக்கோடில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.   அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
									
										
			        							
								
																	சாயில்யம், பம்பாய் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ள பாரீஸ் சந்திரன், பயாஸ்கோப் என்ற படத்திற்கு இசையமைத்ததற்காக அவக்கு கேரள அரசின் சிறந்த பின்னணி இசைக்கான விருது வழங்கப்பட்டது.  இவரது மறைவுக்கு சினிமாத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.