Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அண்ணாச்சி நடித்துள்ள ‘தி லெஜண்ட்’ படத்துக்கு அதிகாலை சிறப்புக் காட்சிகள்

அண்ணாச்சி நடித்துள்ள ‘தி லெஜண்ட்’ படத்துக்கு அதிகாலை சிறப்புக் காட்சிகள்
, வெள்ளி, 15 ஜூலை 2022 (14:49 IST)
லெஜண்ட் சரவணா நடித்துள்ள ‘தி லெஜண்ட்’ திரைப்படம் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் மற்றும் ஊர்வசி ரெளட்டாலா நடிப்பில் உருவான திரைப்படம் தி லெஜன்ட். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது.

பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை பிரபல தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றி ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படம் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தி லெஜண்ட் படத்துக்கு அதிகாலை சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த காட்சிகளுக்கான டிக்கெட்கள் விற்பனை ஜரூராக நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகர் பிரதாப் போத்தன் மறைவு...கமல்ஹாசன் நேரில் அஞ்சலி!