Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘தி லெஜண்ட்’ படத்துக்காக நயன்தாராவை விட அதிக சம்பளம் பெற்ற நடிகை… ஆச்சர்ய தகவல்!

‘தி லெஜண்ட்’ படத்துக்காக நயன்தாராவை விட அதிக சம்பளம் பெற்ற நடிகை… ஆச்சர்ய தகவல்!
, சனி, 30 ஜூலை 2022 (10:06 IST)
தி லெஜண்ட் படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலா நடித்து இருந்திருந்தார். அவரின் சம்பளம் பற்றிய தகவல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.

சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் மற்றும் ஊர்வசி ரெளட்டாலா நடிப்பில் உருவான திரைப்படம் தி லெஜன்ட். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார்.. தமிழ் உட்பட 5 இந்திய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியுள்ளது ‘தி லெஜண்ட்’ திரைப்படம்.

இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்த ஊர்வசி இந்த படத்துக்காக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவை விட அதிகமாக சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இந்த படத்தில் நடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளிடம்தான் பேசப்பட்டது. ஆனால் அவர்கள் யாருமே நடிக்க முன்வரவில்லை என்று சொல்லப்பட்டது. அதன்பின்னர்தான் ஊர்வசி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“கூகுள்லதான் காமெடிய தேடணும்…” ரசிகர்களை ஏமாற்றிய சந்தானத்தின் ‘குலுகுலு’