Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்துக்கு டிவிட்டரில் கிடைத்த அங்கீகாரம்!

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்துக்கு டிவிட்டரில் கிடைத்த அங்கீகாரம்!
, திங்கள், 23 மே 2022 (14:17 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கிரே மேன் திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் நெட்பிளிக்ஸ் திரைப்படமான ’தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்களை எழுத்தாளர் மார்க் கிரேனி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்த படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ் நடிக்கிறார் என்று அவர் கூறியுள்ளார். 

சமீபத்தில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஜூன் 22 ஆம் தேதி அந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் தொடர்பான ஸ்டைலான புகைப்படமும் வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்காக தனி எமோஜியை தற்போது டிவிட்டர் வெளியிட்டுள்ளது. இது சம்மந்தமான அறிவிப்பு தற்போது பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹிட்டடித்த ‘கஞ்சா பூவு கண்ணால’ பாட்டு… விருமன் படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!