Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் ''ஜெயிலர்'' படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (17:42 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு டைட்டில் ”ஜெயிலர்” என்று வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் பெயர் தவிர மற்றவர்கள் பெயர் இடம்பெறவில்லை. சமீபத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்த்  நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ஜெயிலர் படத்தில், பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ள நிலையில் இப்போது, இப்படத்தில் வில்லன் நடிகர் விநாயகன் இணைந்துள்ளார்.

இவர் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் விஷாலுக்கு ஸ்ரேயா ரெட்டியின் உதவியாளாக ந்டித்தவர் வி  நாயகன். இவர், தனுஷின் மரியான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் விஜய்  நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்திலும் அவர் நடித்திருந்தார். இந்த நிலையில், மலையாள சினிமாவில் முக்கிய கேரக்டர்களின் நடித்து வந்த அவர், ரஜினியின் ஜெயிலர் படத்தின் இணைந்துள்ளார்.

இப்படத்திலும் அவருக்கு முக்கிய கேரக்டர் இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நம்மிடம் காசு, பணம் இல்லையென்றால் அம்மாவின் அன்பு மட்டும்தான் கிடைக்கும்… தனுஷ் கருத்து!

ஜனநாயகன் படத்தின் அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

96 படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் கொடுத்த பிரேம்குமார்… VJS இருப்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments