Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினியின் ஜெயிலர் ஷூட்டிங் … சென்னையின் பிரபல லொகேஷனில்!

ரஜினியின் ஜெயிலர் ஷூட்டிங் … சென்னையின் பிரபல லொகேஷனில்!
, செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (16:18 IST)
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு டைட்டில் ”ஜெயிலர்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வெளியான போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றது. அந்த போஸ்டரில் ரத்தம் வழிய கத்தி ஒன்று தொங்குகிறது. போஸ்டரில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் பெயர் தவிர மற்றவர்கள் பெயர் இடம்பெறவில்லை. சமீபத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதுபோல யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து நேற்று ஷுட்டிங் தொடங்கியது. ஷூட்டிங் சென்னையில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த உட்லண்ட்ஸ் ஹோட்டல் இருந்த இடத்தில் செட் அமைக்கப்பட்டு நடக்கிறதாம். அங்கு ஒரு காவல்நிலைய செட் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது ரஜினி மற்றும் யோகி பாபு நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல காலணி உற்பத்தி தொழிற்சாலைகளில் ஐடி ரெய்டு!