தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!

sinoj
புதன், 20 மார்ச் 2024 (22:36 IST)
பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற வேண்டும். இதுதொடர்பாக அறிக்கையை  அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அதில், பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற வேண்டும். இதுதொடர்பக அறிக்கையை நாளை மாலை  5 மணிக்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
 
மேலும், சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகளை 48 மணி நேரத்தில் அகற்ற அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பல சிக்கல்களைக் கடந்து ஒரு வழியாக க்ளைமேக்ஸுக்கு வந்த ‘தி ராஜாசாப்’ படப்பிடிப்பு!

ஜனநாயகன் தமிழக விநியோக உரிமை வியாபாரத்தில் எழுந்த சிக்கல்…!

துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறாரா லிங்குசாமி?

சுந்தர் சி க்கு ரஜினி பட வாய்ப்புக் கிடைக்க காரணமாக அமைந்த மூக்குத்தி அம்மன் 2!

ஸ்பிரிட் படத்தில் பிரபாஸுக்கு அப்பாவாக சிரஞ்சீவி? – இயக்குனர் சந்தீப் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments