இறை உணர்வை திரை மூலம் கடத்துவது எளிதான காரியமல்ல என்று கந்தரா படத்தை இயக்குனர் மோகன் ஜி பாராட்டியுள்ளார்.
கன்னட சினிமாவில் முன்னணி இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயகக்தில் சமீபதிதி வெளியான படம் கந்தரா. இப்படம் இந்தியா முழுவதும் பல மொழிகளில் டப் ஆகி வெளியாகி வரும் காந்தாரா திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலில் இணைந்துள்ளது.
கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான தயாரிப்பு நிறுவனமானது ஹோம்பலே பிலிம்ஸ். அடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக கடந்த வாரம் வெளியான காந்தாரா திரைப்படம் நல்ல விமர்சனங்களைக் குவித்து வருகிறது.
இப்படம் ஐஎம்டிபி ரேட்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. 9.5 மதிப்பெண்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் ஜெய்பீம் திரைப்படம் 8.9 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், KGF 2 திரைப்படம் 8.4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
இதற்கிடையில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. கன்னட சினிமாவில் இந்த மைல்கல்லை எட்டும் 6 ஆவது திரைப்படமாக காந்தாரா அமைந்துள்ளது.
இந்த நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி தன் டிவிட்டர் பக்கத்தில்,
''#Kantara இப்படி இறை உணர்வை திரை மூலம் மக்களுக்கு கடத்துவது எளிதான காரியம் அல்ல.. படத்தின் இறுதி காட்சி உங்களை உறைய வைக்கும்.. @shetty_rishab
மாபெரும் கலைஞன் என்று கந்தார படத்தையும் இயக்குனர் ரிஷப் ஷெட்டியையும் பாராட்டியுள்ளார்.''