Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படம் பற்றிய தகவல்

இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படம் பற்றிய தகவல்
, வியாழன், 13 அக்டோபர் 2022 (22:47 IST)
கடந்த 2017 ஆம் ஆண்டு கூடல் நகர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் சீனுராமசாமி.

அதன்பின், விஜய்சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணியில்  தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து உருவான படம் மாமனிதன்.

 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. இந்த படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா – இளையராஜா இருவரும் தயாரித்து, இசையமைத்தனர். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று, விருதுகளும் குவித்தது.

இந்த நிலையில், சீனு ராமசாமி அடுத்து ஒரு காதல் கதையை அடிப்படையாக கொண்டு ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், இப்படத்தில் மெகந்தி சர்கஸ் என்ற படத்தின் ஹீரோ மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் அவர்.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்தியின் ‘சர்தார்’ சென்சார் தகவல் அறிவிப்பு!