Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் சன்னி தியோலின் வீடு ஏலம் எனக் கூறிய அறிவிப்பு வாபஸ்!

Advertiesment
suny deol
, திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (16:01 IST)
இந்தி சினிமா  நடிகர் சன்னி தியோல்  கடனை திரும்ப  செலுத்தாததால்   அவரது வீடு ஏலத்திற்கு விடப்படும் என்று  பாங்க் ஆப் பரோடா வங்கி  அறிவித்த நிலையில் அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இவர் ஆக்சன் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.  சன்னி, பேட்ஆப்,. அர்ஜூன், சோர், சாம்பியன்ஸ், கேல்,ஹீரோஸ், நரி, ரைட் யா ராங், த  மேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர்   சினிமாவில் நடிகராகவும், குருதாஸ்பூர் தொகுதி பாஜக எம்.பியாகவுள்ள நிலையில்,  ரூ.56 கோடி ரூபாய் கடனை திரும்ப  செலுத்தாததால்   அவரது வீடு ஏலத்திற்கு விடப்படும் என்று  பாங்க் ஆப் பரோடா வங்கி அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தொழில் நுட்ப காரணங்களால்  இந்த அறிவிப்பை வாபஸ் பெறுவதாக பாங்க் ஆப் பரோடா தெரிவித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சன்னி தியோலின் கட்டார் 2 படம் கடந்த வாரம் ரிலீஸாகி ரூ.300 கோடிக்கு mael  வசூல் குவித்துள்ள  நிலையில்   சன்னி தியோல் ரூ.56 கோடி கடனை  திருப்பி செலுத்த முடியாதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்குப் பிடித்த நடிகர் விஜய்- விஜய் தேவரகொண்டா ஒபன் டாக்