சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங் என பலர் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் படம் பத்மாவதி.
இப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் வெளியிட கூடாது என்று ராஜபுத்ர அமைப்பு கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தீபிகா படுகோனே தலை வெட்டுபவருக்கு ரூ. 5 கோடி, சஞ்சய் லீலா பன்சாலி தலையை வெட்டுவோருக்கு ரூ. 10 கோடி என பல அமைப்புகள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் இவ்வளவு பிரச்சனையில் இருக்கும் அந்த பத்மாவதி படத்தின் நிஜ பத்மாவதி யார்? என்ன என்பதனை அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர். ராணி பத்மாவதி என்ற பெயர் 1540ம் ஆண்டு மாலிக் மொஹமத் யாசி என்ற சூபி கவிஞரோட கவிதையில் இடம் பெற்றிருக்கிறது.
ராணி பத்மாவதி கி.பி. 13-14ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப் பெரிய பேரழகி. இவரிடம் ஹிரா மணி என்ற பேசும் கிளி இருந்திருக்கிறது. அந்த கிளி சித்தூர் அரசன் ராணா ரத்தன் சிங் என்ற ராஜாவிடம் சென்று எங்களது ராணி பேரழகி என்று கூறியிருக்கிறது.. உடனே அவரும் ராணியை திருமணம் செய்ய சுயம்வரத்திற்கு வந்திருக்கிறார். சுயம்வரத்தில் பத்மாவதியையும் திருமணம் செய்து கொள்கிறார். அந்த சமயத்தில் டெல்லியை ஆண்ட அரசர் அலாவுதீன் ஹில்ஜி, பத்மாவதி அழகு பற்றி கேள்விபட்டு சித்தூர் அரசவைக்கு வருகிறார். ராணியை பார்த்ததும் காதலில், பத்மாவதிக்கு பதிலாக அவரது கணவர் ராணா ரத்தன் சிங்கை சிறை பிடித்து செல்கிறார்.
சிறை பிடித்த அலாவுதீன் ராணா ரத்தனிடம் உன் மனைவியை கொடு, உன்னை விடுவிக்கிறேன் என்கிறார். பத்மாவதி தன் கணவரை மீட்பதற்காக ஒரு படையை திரட்டிக் கொண்டு டெல்லி சென்று அலாவுதீன் படையை அழித்து தன் கணவரை மீட்கிறார். ஒரு பெண் தன் படையை அழித்துவிட்டாளே என்ற கோபத்தில் அலாவுதீன் பெரும் படையை திரட்டிக் கொண்டு சித்தூர் நோக்கி படையெடுக்கிறார். இதனை பார்த்த பத்மாவதி என்னால் இதை சமாளிக்க முடியாது என்று கூறி தான் மட்டும் சாகாமல் தன்னுடன் 16 ஆயிரம் பெண்களையும் கூட்டிக் கொண்டு தீ மூட்டி, அதில் குதித்து இறக்கிறார். இப்படி ராணி பத்மாவதியின் கதை முடிகிறது.