பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் ஆர்.கே.சுரேஷ், வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அதைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளிவந்த ‘மருது’ படத்திலும் கொடூரமான வில்லனாக வந்து அசத்தியிருந்தார். அப்படம் அவருக்கு மிகப் பெரிய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
இந்நிலையில், தொடர்ந்து வில்லன் வேடங்களில்தான் நடிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது புதிய படமொன்றில் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார் ஆர்.கே.சுரேஷ். இவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
மேலும், இப்படத்தின் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் யார் என்பது குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த ‘தர்மதுரை’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவிற்கு ஒரு திறைமையான வில்லன் கிடைத்து விட்டார் என்றனர். அதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வில்லன் அவதாரமே எடுப்பார் என்று அதிகமானவர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாகும் இப்படத்திற்கு தனிமுகம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.