காதலர் விக்னேஷ் சிவனுக்காக படம் பண்ண முடிவு செய்த நயன்தாரா, அஜித்தின் கால்ஷீட் கேட்டு பல முக்கிய பிரமுகர்களை அனுப்பி வைத்தார்.
ஆனால், அஜித் யாரையும் திரும்பிக் கூட பார்க்கவில்லை. இதனால், நயன்தாராவே நேரடியாக அஜித்தை அணுகினார். அப்போது, படத்தின் இயக்குனர் யார் என அஜித் கேட்டுள்ளார். விக்னேஷ் சிவன் என நயன்தாரா கூறியதும், படம் பண்ண முடியாது என கூறிவிட்டாராம் அஜித்.
மேலும், நான் அறிமுகம் செய்த முருகதாஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் என்னிடம் கால்ஷீட் கேட்டு, அவர்களுக்கு கொடுக்காத நிலையில், விக்னேஷ் சிவனுக்கு கொடுக்க முடியாது எனவும் கூறிவிட்டாராம் அஜித்.
இதற்கான காரணம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டால், நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் கதைகள் பற்றி நிறைய பேசப்படும் என்பதால், அது பிடிக்காமல் அஜித் இப்படி முடிவு எடுத்தாக தெரிகிறது.