Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னை இங்கிலீஸில் பேச வைத்ததற்கு நன்றி..சிவகார்த்திகேயன் டுவீட்

Advertiesment
என்னை இங்கிலீஸில் பேச வைத்ததற்கு நன்றி..சிவகார்த்திகேயன் டுவீட்
, செவ்வாய், 19 ஜனவரி 2021 (18:22 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் படப்பிடிப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

இன்று  நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமர் அயலான் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங், யோகி பாபு மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர் சயின்ஸ் பிக்சன் படமாக பிரமாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில்  இப்படத்தி நாயகி ராகுல் பிரீத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் அயலான் படத்தில் எனது பகுதி  படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளேன். இன்னும் எனக்கு 3 நாட்கள் மட்டுமே நான் கடைசிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளேன். நடிகர் சிவகார்த்திகேயன் இனிமையாகப் பழகுபவர்; இயக்குநர் ரவிக்குமார் உணர்ச்சிமிக்கவர் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இதற்கு  நடிகர் சிவகார்த்திகேயன்  டுவீட்  பதிவிட்டுள்ளார். அதில், என்னை இங்கிலீஸில் பேச வைத்ததற்கு நன்றி. உங்களுடன் இணைந்து பணியாற்றியதில் எனக்கும் மகிழ்ச்சி எனப் பதிவிட்டுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சீமத்துரை படத்தைத் தயாரித்த ஆர் டி ராஜா 24 ஏஎம் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார்.

 
மேலும் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், ஷரத் கெல்கர் இஷா கோபிகர் உள்பட பலர் நடித்துள்ள டாக்டர் படமும் விரைவில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’விஜய்க்கு நன்றி....மக்களைக் காப்பாற்றியது சினிமா’’ - ஹிட் பட இயக்குநர்