Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த தங்கர்பச்சான்: என்ன காரணம்?

Advertiesment
தங்கர்பச்சான்
, புதன், 7 ஜூலை 2021 (13:01 IST)
பிரபல இயக்குநர் தங்கர்பச்சான் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சற்றுமுன் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களாக திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது புதிய ஒளிப்பதிவு சீர்திருத்த சட்டம் என்பது தெரிந்ததே. இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் இயக்குனர் தங்கர்பச்சான் பேசினார். ஆனால் இயக்குனர் தங்கர்பச்சான் புதிய ஒளிப்பதிவு சட்டத்தை ஆதரித்து வருவதாக சமூக வலைதளங்களில் ஒரு சிலர் பொய்யான செய்திகளை பரப்பி வந்தனர் 
 
இதுகுறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ள தங்கர்பச்சான் தன் மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றே தான் ஒளிப்பதிவு சீர்திருத்த சட்டத்தை ஆதரிப்பதாக சிலர் வதந்தியை கிளப்பி வருகின்றனர் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
நான் ஒளிப்பதிவு சீர்திருத்த சட்டத்தை ஆதரிப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி முற்றிலும் தவறானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இயக்குநர் தங்கர் பச்சானின் புகார் மீது விரைவில் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைவர் ரிட்டர்ன்: அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்த்!