சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலமாக அண்டாவக் காணோம் என்ற படத்தை தயாரித்தார் தயாரிப்பாளர் சதீஷ்குமார். பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இன்னும் அந்த படம் ரிலீஸாகவில்லை.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	தண்டட்டி படத்தின் கதையும் தன்னுடைய அண்டாவக் காணோம் படத்தின் கதையும் ஒரே மாதிரி இருப்பதாக தனக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்தார். மேலும் தான் அந்த படத்தை பார்த்து தன்னுடைய சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள வழி செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டிருந்தார்.
 
									
										
			        							
								
																	அதையடுத்து படம் அவருக்குக் காண்பிக்கப்பட்டதாகவும், படத்தை விட்டு இரு படங்களின் கதையும் வேறு வேறு என அவர் கூறியுள்ளதாகவும், தண்டட்டி படத்தின் இயக்குனர் ராம் சங்கையா தெரிவித்துள்ளார். இதனால் தண்டட்டி படத்தின் ரிலீஸுக்கு இருந்த பிரச்சனை தீர்ந்துள்ளது.
 
									
											
							                     
							
							
			        							
								
																	பசுபதி நடிப்பில் உருவாகும் தண்டட்டி என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி சமூகவலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த படத்தை ராம் சங்கையா இயக்கியுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட உள்ளது. கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள நிலையில் மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா மற்றும் ரோகினி ஆகியோர் நடித்துள்ளனர்.