பா ரஞ்சித்தின் அடுத்த படத்துக்கு வழங்கப்பட்ட சென்சார் சான்றிதழ்…!

vinoth
வெள்ளி, 15 ஆகஸ்ட் 2025 (16:16 IST)
தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர் பா.ரஞ்சித் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான  அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை அடுத்து, மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கபாலி, காலா ஆகிய படங்களை அடுத்து, ஆர்யாவுடன் சட்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களை இயக்கினார்.

இந்த நிலையில்,  நீலம் புரடெக்சன் என்ற நிறுவனத்தைத் தொடங்கி அவர் தொடர்சியாகப் படங்களைத் தயாரித்தும் வருகிறார். அந்த வரிசையில், தினேஷ் நடிப்பில், ஆதிரை இயக்கியுள்ள ‘தண்டகாரண்யம்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் தயாரிப்புப் பணிகள் முடிந்தாலும் ரிலீஸாகாமல் தாமதமாகிக் கொண்டே சென்றது.

இந்நிலையில் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டுள்ள இந்த படம் UA சான்றிதழ் பெற்றுள்ளது. இதுபற்றி பதிவிட்டுள்ள இயக்குனர் அதியன் “அமரன்கள் செய்த அநீதிகளைப் பேசும் #தண்டகாரண்யம். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் கலக்கல் புகைப்படத் தொகுப்பு!

பிக் பாஸ் 9: வைல்ட் கார்டு மூலம் கணவன் - மனைவி ஜோடி என்ட்ரி! இனிமேல் சூடு பிடிக்குமா?

மீண்டும் போலீஸ் உடையில் சூர்யா… எந்த படத்தில் தெரியுமா?

பெயரை சுருக்க சொன்னது அவர்தான்… ஆனா காரணம் சொல்லமுடியாது – ஆர் ஜே பாலாஜி பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments