சென்சார் ஆனது ‘தள்ளி போகாதே’: ஆனால் ஓடிடியில் தான் ரிலீஸா?

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (18:51 IST)
அதர்வா நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று தள்ளிப்போகாதே என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று விரும்பிய இந்த படத்தின் இயக்குனர் கண்ணன் சென்சார் சான்றிதழுக்கு அப்ளை செய்தார். சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இது குறித்த தகவலை ஆர். கண்ணன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள காரணத்தினால் இந்த படம் ஓடிடியில் வெளியாக தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
ஓடிடியில் வெளியாவதற்கு சென்சார் தேவையில்லை என்பது தெரிந்ததே. எனவே சென்சார் ஆகியும் இந்த படம் ஓடிடியில் தான் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதர்வா ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள இந்த படத்திற்கு கோபிசுந்தர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏவிஎம் சரவணன் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments