Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்ணன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கர்ணன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, புதன், 28 ஏப்ரல் 2021 (08:51 IST)
ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியான கர்ணன் படத்தின் ஓடிடி ரிலீஸ் மே 9 ஆம் தேதி என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை படம் வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். தனுஷ் படத்துக்கு இதுவரை இல்லாத முதல் நாள் வசூல் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கடுத்த நாட்களிலும் வசூல் குறையாமல் உள்ளது.

இந்நிலையில் இப்போது கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் கர்ணன் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியான கர்ணன் திரைப்படம் 30 நாட்கள் கழித்து மே 9 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி தெளிக்கும் சாக்‌ஷி!