Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் கடைசி பட டைட்டில் அறிவிப்பு எப்போது?.. வெளியான தகவல்!

vinoth
வியாழன், 23 ஜனவரி 2025 (14:28 IST)
GOAT படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. முதலில் ஒரு பிரம்மாண்டமானப் பாடல் காட்சியை படமாக்கினார் இயக்குனர் வினோத். இப்போது சென்னையில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இதையடுத்து ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்காக இருக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்… க்யூட் ஆல்பம்!

பரபர த்ரில்லர் ஸ்டைலில் DNA டிரைலர்… அதர்வாவுக்குத் திருப்புமுனையாக அமையுமா?

வாடிவாசல் கிடப்பில் போடப்பட்டதால் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குவது இவர்தான்!

சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி… வாழ்த்தி கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments