Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘தளபதி 66’ ஃபர்ஸ்ட் லுக்கோடு வரும் சர்ப்ரைஸ்… விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Webdunia
வியாழன், 26 மே 2022 (12:56 IST)
விஜய் நடிக்கும் அடுத்த படமாக தளபதி 66 உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது இன்று ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. படத்தில் நடிக்கும் முக்கியக் கதாபாத்திரங்களுக்கான நடிகர் நடிகைகள் பற்றி onboard தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. மேலும் ‘தளபதி 66’ படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் எனவும் அந்த போஸ்டர்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகாத நிலையில் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஐ முன்னிட்டு ஜூன் 21 ஆம் தேதி தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வெறும் பர்ஸ்ட் லுக் மட்டும் இல்லாமல் ஒரு சிறிய வீடியோ கிளிம்ப்ஸோடு தலைப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் இதுபோல வெளியான விக்ரம் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments