Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதி 65 படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? வெளியான அப்டேட்!

தளபதி 65 படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? வெளியான அப்டேட்!
, திங்கள், 1 பிப்ரவரி 2021 (10:40 IST)
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் மத்தியில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகனன்  நடித்துள்ள ’டாக்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் முடிந்தது. இப்போது நெல்சன் முழுக்க முழுக்க விஜய் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

கதாநாயகிகள் தேர்வு மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு எல்லாம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சில சேஸிங் காட்சிகள் மட்டும் வெளிநாடுகளிலும் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. படப்பிடிப்பை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு மேல் நெல்சன் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேஜிஎப் வில்லனை கமிட் செய்த ஹரி… செம்ம எதிர்பார்ப்பில் அருண் விஜய் படம்!