Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 வருடக் கனவு, 7 வருடக் கடின உழைப்பு, 3 வருடக் காத்திருப்பு – அறிமுக இயக்குனர் நெகிழ்ச்சி!

10 வருடக் கனவு, 7 வருடக் கடின உழைப்பு, 3 வருடக் காத்திருப்பு – அறிமுக இயக்குனர் நெகிழ்ச்சி!
, வியாழன், 28 ஜனவரி 2021 (11:44 IST)
நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்க உள்ள சிபி சக்ரவர்த்தி வாய்ப்புக் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கும் படத்தை இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார், அனிருத் இசையமைக்கும் இந்த படத்துக்கு டான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தன் முதல் படத்திலேயே சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகரை இயக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது பற்றி சிபி சக்ரவர்த்தி டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அதில் ‘ இந்த வாய்ப்பு 10 வருடக் கனவு, 7 வருடக் கடின உழைப்பு, 3 வருடக் காத்திருத்தல். எல்லாம் இந்த ஒரு நாளுக்காகத்தான். நான் இயக்கும் முதல் திரைப்படம். சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’, இசை ராக்ஸ்டார் அனிருத், லைகா மற்றும் எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு. எனது குடும்பத்தினர், குரு அட்லி சார் மற்றும் என்னை நம்பி வாய்ப்பளித்த சிவகார்த்திகேயன்  சார் ஆகியோருக்கு நன்றி’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர் ஆர் ஆர் பட ரிலீஸால் அதிருப்தியில் போனி கபூர்!