இன்று காலை விஜய் சேதுபதி வெளியிடும் 'சித்திரம் பேசுதடி 2' டிரெய்லர்

வியாழன், 6 டிசம்பர் 2018 (11:32 IST)
‘முரண்’ படத்தை இயக்கியவர் ராஜன் மாதவ். இவர் அடுத்ததாக 'சித்திரம் பேசுதடி 2' படத்தை இயக்கி உள்ளார்.இதில் விதார்த், ராதிகா ஆப்தே, அஜ்மல், காயத்ரி, அசோக் மற்றும் நிவேதிதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர், இப்படத்திற்கு சஜன் மாதவ் இசையமைத்துள்ளார். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லரை இன்று காலை 11 மணிக்கு  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட உள்ளார்.
 
மிஷ்கின் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘சித்திரம் பேசுதடி’. நரேன், பாவனா, ‘காதல்’ தண்டபாணி ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தில் கானா உலகநாதன் பாடி, மாளவிகா நடனமாடிய ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...’ பாடல் வைரல் ஹிட்.
 
இந்நிலையில் விதார்த் நடித்துள்ள இப்படத்துக்கு ‘சித்திரம் பேசுதடி 2’ என்று தலைப்பு வைத்தாலும், ‘சித்திரம் பேசுதடி’ படத்துக்கும், இந்தப் படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று படக்குழுவினர் கூறினர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அஜித்துடன் நடித்த சிவகார்த்திகேயன்... முதல் படமும் சிவகார்த்திகேயனுக்கு இதுதான்... வெளிவராத தகவல்.