ட்யூன் போட தெரியாம காப்பி அடிச்சுடானுங்க... பாலிவுட் படத்தில் விஸ்வாசம் தீம் மியூசிக்!

வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (11:13 IST)
பாலிவுட் படமான மர்ஜவான் படத்தில் தல அஜித்தின் விஸ்வாசம் பட தீம் மியூசிக் பயன்படுத்தப்பட்டுள்ளது தற்போது சர்ச்சையாகி உள்ளது. 
 
மர்ஜவான் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. பாலிவுட் இயக்குனர் மிலாப் சவாரி இயக்கியுள்ள இந்த படத்தில் ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.
 
இந்த படத்தின் டிடெய்லர் இப்போது கோலிவுட் ரசிகர்களின் கண்களில்பட்டு பேசு பொருளாக மாறியுள்ளது, காரணம் இந்த படத்தின் டிரெய்லர் பாக்கிரவுண்ட் மியூசிக்காக விஸ்வாசம் படத்தின் தீம் மியூசிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. அகித் ரசிகர்கள் இதை குறிப்பிட்டு, பாலிவுட்காரன் மியூசிக் போட தெரியாம காபி அடிச்சுட்டான் என கமெண்ட் அடித்து வருகிறனர். 
ஆனால், இந்த படத்தின் டிரெய்லர் டிஸ்கிரிப்ஷனில் இந்த தீம் மியூசிக்கை அனுமதியுடனே பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் இமானோ இது குறித்து எனக்கு எந்த ஒரு தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். 
 
மர்ஜவான் படத்திற்கு ஐந்து இசையமைப்பாளர்கள் இருந்தும் எதற்கு இப்படி செய்தார்கள் என்பது அடுத்தக்கட்ட விவதாமாக இருக்க கூடும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ’நம்ம வீட்டுப் பிள்ளை’க்கு கிடைத்து வரும் பாசிட்டிவ் விமர்சனங்கள்