Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் ஜெயம் ரவி மீது போலீஸில் புகார்: கோலிவுட்டில் பரபரப்பு

Advertiesment
நடிகர் ஜெயம் ரவி மீது போலீஸில் புகார்: கோலிவுட்டில் பரபரப்பு
, வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (08:38 IST)
கோலிவுட் திரையுலகின் இளம் நாயகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான ‘கோமாளி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சென்னை உள்பட பல நகரங்களில் இந்த படம் தொடர்ந்து நான்கு வாரங்கள் ஓடியதால் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்ததாகவும், இதனையடுத்து இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதனுக்கு தயாரிப்பாளர் புதிய கார் ஒன்றை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வாங்கி கொடுத்ததாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
 
இந்த நிலையில் ஜெயம் ரவி மீது சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜெயம் ரவிக்கு பாதுகாப்பு அளித்து வந்த தனியார் பாதுகாவலர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும் இதனையடுத்து ஜெயம் ரவியின் உதவியாளர் மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் விரைவில் விசாரிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. ஜெயம் ரவி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
இந்த நிலையில் ஜெயம் ரவி தற்போது ‘ஜனகணமன’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ’என்றென்றும் காதல்’ இயக்குனர் அஹமது இயக்கி வருகிறார். ஜெயம் ரவியின் 26 வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்ஸி நடித்து வருகிறார். மேலும் ’செக்கச் சிவந்த வானம்’  படத்தில் நடித்த நடிகை டயானா எரப்பா, ஈரான் நடிகை  ல்னாஸ் நோரோஸி, ஆக்சன் கிங் அர்ஜுன், கேஜிஎப் வில்லன் ராம், மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் சீசன் 3ல் கவின் ஹீரோவா? வில்லனா?