Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

படப்பிடிப்பின்போது பிரபல நடிகைக்கு மாரடைப்பு! உயிருக்கு போராடுவதாக தகவல்

Advertiesment
படப்பிடிப்பின்போது பிரபல நடிகைக்கு மாரடைப்பு! உயிருக்கு போராடுவதாக தகவல்
, வெள்ளி, 22 நவம்பர் 2019 (23:16 IST)
பிரபல தொலைக்காட்சி நடிகர் ஒருவர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உயிருக்கு போராடி வருவதாகவும் கூறப்படுகிறது
 
மும்பையை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகை கெஹனா வசிஸ்த் என்பவர் சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். தொடர்ச்சியாக 48 மணி நேரம் படப்பிடிப்பு மற்றும் சரியாக உணவு, உறக்கம் இல்லாத காரணத்தால் திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார்
 
இதனை அடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
மேலும் நடிகை கெஹனா வசிஸ்த்துக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாகவும் அது மட்டுமன்றி ரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்ததாகவும் இதனால் அவர் மயக்க நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் தற்போது அவருக்கு தங்களால் முடிந்தவரை உயர்தர சிகிச்சை அளித்து கொண்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். நடிகை கெஹனா வசிஸ்த் நலமுடன் திரும்ப வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ ரிலீஸ் தேதி குறித்த தகவல்!