நடிகை பார்வதியைப் பின் தொடர்ந்து தொல்லைக் கொடுத்த இளைஞர் – போலிஸில் புகார் !

வெள்ளி, 22 நவம்பர் 2019 (15:08 IST)
மலையாள நடிகை பார்வதியைப் பற்றி அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் உண்மைக்குப் புறம்பான தகவலைப் பரப்பிய நபர் மேல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடிகை பார்வதியின் அண்ணனுக்கு ஒரு குறுஞ்செய்தியில் தன்னை வழக்கறிஞர் என அறிமுகப்படுத்திக்கொண்ட கிஷோர் என்பவர், பார்வதி சில மாஃபியா கும்பலிடம் சிக்கி இருப்பதாகவும்  அவரை மீட்க வேண்டும் எனவும் பேசியுள்ளார்.

தொடர்ந்து பார்வதியைப் பற்றி தவறான செய்திகளை அவர் அனுப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் அவரின் உளறல்களைக் கேட்டு கடுப்பான அவர் கிஷோரின் எண்ணை பிளாக் செய்துள்ளார். அதன் பின்னர் கிஷோரின் மெசேஜ்கள் பர்வதியின் தந்தைக்கு வர ஆரம்பித்துள்ளன. அதன் பின்னர் பார்வதியின் வீட்டருகே குடியிருப்பவர்களிடம் பார்வதி பல ஆண்களிடம் பேசிகொண்டு இருப்பதாகவும் அதில் ஒருவர் தனது நண்பர் எனவும் சொல்லியுள்ளார். இதையடுத்து பார்வதி கேரள போலிஸாரிடம் அவர் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்க்ரின் ஷாட்களை ஆதாரங்களாக சமர்ப்பித்து புகார் கொடுத்துள்ளார். போலீஸார் இந்தியத் தண்டனைச் சட்டம் 354 டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஆதித்ய வர்மா மேக்கிங் ஸ்டில்ஸ்!