Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம்… அதுவும் ஓடிடிக்கு போகுதே… அப்செட்டில் விக்ரம் பிரபு!

Advertiesment
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம்… அதுவும் ஓடிடிக்கு போகுதே… அப்செட்டில் விக்ரம் பிரபு!
, செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (10:00 IST)
நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள டாணாக்காரன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும் இளைய திலகம் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு கடந்த 2012 ஆம் ஆண்டு கும்கி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் ’இவன் வேற மாதிரி’ ’அரிமா நம்பி’ ’சிகரம் தொடு’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த அவர் தற்போது ’புலிக்குட்டி பாண்டியன்’ ’பொன்னியின் செல்வன்’ ’பாயுமொளி நீ எனக்கு ’ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எந்த படமும் அவருக்கு குறிப்பிடத்தகுந்த வெற்றியை தரவில்லை.

இந்த நிலையில் விக்ரம் பிரபு நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ‘டாணாக்காரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அதன் டீசர் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. டீசரில் போலிஸ் பயிற்சி பள்ளிகளில் நடக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விக்ரம் பிரபு மோதும் படமாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. இந்த படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என விக்ரம் பிரபு பெரிதும் நம்பியிருந்தாராம். ஆனால் இப்போது அந்த படத்தை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளாராம். இதனால் விக்ரம் பிரபு அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனியாக ஒரு ஓடிடி தொடங்கும் வெங்கட்பிரபு!