Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனியாக ஒரு ஓடிடி தொடங்கும் வெங்கட்பிரபு!

Advertiesment
தனியாக ஒரு ஓடிடி தொடங்கும் வெங்கட்பிரபு!
, செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (09:55 IST)
இயக்குனர் வெங்கட்பிரபு பிளாக்டிக்கெட் சினிமாஸ் என்ற பெயரில் புதிதாக ஒரு ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெங்கட்பிரபு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். நடிகராக ஒரு சில படங்களில் தலைகாட்டிய அவர் 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் ஒரே நாளில் உலக பேமஸ் ஆனார். அதையடுத்து அவர் இயக்கிய சரோஜா, மங்காத்தா  ஆகிய படங்கள் அவரை முன்னணி இயக்குனர் ஆனார்.

இப்போது சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறாராம். இந்நிலையில் கொரோனா காரணமாக ஓடிடிகளின் வருகை அதிகமாகியுள்ள நிலையில் வெங்கட் பிரபு தன்னுடைய புதிய ஓடிடியை தொடங்க உள்ளாராம். அந்த ஓடிடிக்கு பிளாக் டிக்கெட் சினிமாஸ் எனப் பெயர் வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீஸ்ட் படத்தில் செல்வராகவன் சம்பளம்… இரண்டாவது படத்திலேயே இவ்வளவா?