தனுஷின் அடுத்த படத்தை நான் இயக்கலாம்…. மேடையில் அறிவித்த இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து!

vinoth
திங்கள், 15 செப்டம்பர் 2025 (12:34 IST)
தனுஷ் தனது நான்காவது படமாக (இயக்குனராக) ‘இட்லி கடை’ படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது.  படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றுகிறார்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படம் அக்டோபர் 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக லப்பர் பந்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “எனது அடுத்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக லொகேஷன் பார்க்க வந்துள்ளேன். எனது அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கலாம். அந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கலாம்” எனப் பேசியுள்ளார். இதன் மூலம் தனுஷின் அடுத்த படத்தை அவர் இயக்குவதை உறுதி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்க அரசியலுக்கு செட்டாக மாட்டீங்கன்னு விஜய்கிட்ட சொன்னேன்! - சர்கார் பட நடிகர் பதிவு!

கேஷ்வல் உடையில் ஹாட் போஸில் அசத்தும் பூனம் பாஜ்வா!

மாளவிகா மோகானின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சூட்டோடு சூடாக வெளியானது ‘லோகா 2’ அப்டேட்!

நிர்வாணமாக கூத்தடிக்க தனியா ஒரு கேரவன்.. ஒரு நடிகருக்கு 6 கேரவன்! - பாலிவுட்டை விளாசி தள்ளிய இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments