நேற்று இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடந்த நிலையில் அதில் ரஜினிகாந்த் கூறிய சம்பவம் வைரலாகியுள்ளது.
இசைஞானி இளையராஜாவின் திரைப்பயணத்தை பாராட்டும் விதமாக நேற்று சென்னையில் தமிழக அரசால் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் புதிய சிம்போனி இசைக்கப்பட்டது. பின்னர் பலரும் இளையராஜாவுடனான நினைவுகளை பகிர்ந்தனர்.
அப்போது பேசிய ரஜினி “ஜானி பட ஷூட்டிங்கின்போது நானும் மகேந்திரன் சாரும் விஜிபி ஓட்டலில் தங்கியிருந்தோம். அன்று இரவு இளையராஜாவும் ட்யூன் டிஸ்கஷனுக்காக அங்கே வந்தார். அப்போது சரக்கு சாப்பிடலாமா சார் என கேட்க அவரும் ஓகே என்றார். ஒரு அரை பீர்தான் குடித்திருப்பார். அதை குடிச்சிட்டு அவர் பண்ணுன அலப்பறை இருக்கே.. அய்யய்யயோ..! நைட் 2,3 மணி வரைக்கும் ஒரே பேச்சுதான். மகேந்திரன் சார் ட்யூன் பத்தி ஏதாவது பேச வந்தா, அது இருக்கட்டும் என சொல்லிட்டு நிறைய கிசுகிசுக்களை பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார். முக்கியமா நடிகைகள் பத்தின கிசுகிசுக்களை ரொம்ப கேட்டார்” என பேச அரங்கமே சிரிப்பில் ஆழ்ந்தது.
பின்னர் பேசிய இளையராஜா “ரஜினி உண்மையை சொல்றேன்னு கேப்ல அவர் கற்பனையாவும் சில விஷயங்களை அள்ளி விடுறார் பாத்தீங்களா?” என சிரித்துக் கொண்டே கேட்டார்.
Edit by Prasanth.K