Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்லைஃப் ஓடிடி ரிலீஸ் முடிவு.. கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் நன்றி!

vinoth
வியாழன், 22 மே 2025 (16:19 IST)
நாயகன் என்ற கல்ட் கிளாசிக் படத்தைக் கொடுத்த கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் படம் திரையரங்குகளில் ரிலீஸாகி 8 வாரங்கள் கழித்துதான் ரிலீஸாகும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுபற்றி பேசியுள்ள கமல் “இது ஒரு பரிசோதனைக் கூட இல்லை. இதுதான் நடைமுறை. இந்த முடிவுக்கு ஒத்துக்கொண்ட நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு நன்றி. இது சினிமாவுக்கு ஆரோக்யமான ஒன்றாக இருக்கும். அப்படி அமைந்தால் அதை முதலில் பயன்படுத்திக் கொண்டது நாங்களாக இருப்போம்” எனக் கூறியிருந்தார். இதன் மூலம் திரையரங்குகளுக்குப் படம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கமல்ஹாசனின் இந்த முடிவை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளது. இதை மற்ற தயாரிப்பாளர்களும் பின்தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

20 கோடி சம்பளம்.. 8 மணி நேரம் தான் வேலை.. லாபத்தில் பங்கு.. தீபிகாவை நீக்கிய இயக்குனர்..!

ஜெயிலர் 2 அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்!

சம்மந்தப்பட்ட நடிகை என்னிடம் மன்னிப்புக் கேட்டார் – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்ரன்!

நாயகன் படத்துக்கும் ‘தக் லைஃப்’ படத்துக்கும் ஒருவிஷயம்தான் சம்மந்தம்- மணிரத்னம்

சம்பளமே வாங்காமல் நடித்த சிவகார்த்திகேயன்.. ‘பராசக்தி’ பணம் அவ்வளவுதானா?

அடுத்த கட்டுரையில்
Show comments