நாயகன் என்ற கல்ட் கிளாசிக் படத்தைக் கொடுத்த கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு தக் லைஃப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்கிடையில் படத்தின் டிரைலர் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் படம் பற்றி ஒரு நேர்காணலில் பேசியுள்ள இயக்குனர் மணிரத்னம் “சக்திவேல் நாயக்கர் என்ற பெயர் மட்டும்தான் நாயகன் படத்தில் இருந்து இந்த படத்தில் வருகிறது. நாயகன் படத்தில் 30 வயதில் இருந்த கமல் சார் 60 வயது கதாபாத்திரத்தை செய்தார். இப்போது அவரின் அறுபதுகளில் 30களில் இருந்து அவரது கதாபாத்திரம் தொடங்குகிறது” எனக் கூறியுள்ளார்.