Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் படங்களின் ஷூட்டிங் தமிழ்நாட்டிலே நடக்க வேண்டும்.. ஃபெப்சி அமைப்பு அறிக்கை!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (14:16 IST)
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி, பொதுச்செயலாளர் பி.என்.சுவாமிநாதன், பொருளாளர் எஸ்.பி.செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ”தமிழ்த் திரைப்பட துறை வளர்ச்சிக்காக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தயாரிப்பாளர்கள் சங்கத்துடனும், அனைத்து திரைப்பட அமைப்புகளுடனும் கலந்தாலோசித்து சில விதிகளை பின்பற்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் முடிவு எடுத்துள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமும் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்திட்ட ஒப்பந்ததை முழுமையாக பின்பற்ற வேண்டும். தமிழ் திரைப்படங்களில் தமிழகத்தில் உள்ள கலைஞர்களை, தொழிலாளர்களை, தொழில்நுட்பக் கலைஞர்களை, தயாரிப்பாளர்களை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பை தமிழகத்திலேயே நடத்திட வேண்டும். அவசியம் ஏற்பட்டால் ஒழிய வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இயக்குநரே எழுத்தாளராக இருந்தால், கதை உரிமையில் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் அவரே பொறுப்பேற்க வேண்டும். தயாரிப்பாளரையோ, திரைப்படத்தையோ அந்த பிரச்சினை பாதிக்கக் கூடாது”  என்று தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து 2 தேசிய விருது பெற்ற இயக்குனர்களின் படங்களில் சூர்யா?

அஜித்துடன் மீண்டும் நடித்தது ப்ளாஸ்ட்.. சிம்ரனின் நெகிழ்ச்சியான பதிவு..!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் லுக் போட்டோஸ்!

கருநிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கலக்கும் யாஷிகா!

இங்கிலாந்தில் முதல் நாள் வசூல்… சாதனைப் படைத்த ‘குட் பேட் அக்லி’

அடுத்த கட்டுரையில்
Show comments