Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் டாப்ஸி!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (14:10 IST)
பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை டாப்ஸி “ஆடுகளம்” மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி சமீபத்தில் நடித்த சபாஷ் மிது திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.

டாப்ஸி கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழில் அனபெல் சேதுபதி என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் படுதோல்வி அடைந்தது. அதையடுத்து அவர் இந்தி படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் ஏலியன் என்ற தமிழ்ப் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதை அவரே சமீபத்தில் ரசிகர்களுடன் உடனான உரையாடலில் தெரிவித்துள்ளார்.  படம் பற்றி பேசிய டாப்ஸி “நான் இந்த படத்தில் ஏலியனாக நடிக்கவில்லை. இந்த படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

சிம்பு & வெற்றிமாறன் இணையும் படத்தின் தயாரிப்பாளர் இவரா?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments