விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா!

புதன், 18 செப்டம்பர் 2019 (20:57 IST)
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ’பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தீபாவளி தினமான ஞாயிறன்று ரிலீசாகுமா? அல்லது அதற்கு முந்தைய வெள்ளியன்று ரிலீஸ் ஆகுமா? என்பதை சென்சார் சான்றிதழ் கிடைத்த பின்னரே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது தெரிந்ததே 
 
 
இதேபோல் விஜய்யின் ’பிகில் படம் ரிலீஸாகும் அதே தீபாவளி தினத்தில், கார்த்தி நடித்த ’கைதி’ திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாயகியே இல்லாமல் முழுக்க முழுக்க விறுவிறுப்பான ஆக்சன் திரைப்படமான இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் பிகில் படத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்த படம் வசூலை அள்ளிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 
 
மேலும் பிகில், கைதி என இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாவதால் இதற்கு மேல் வேறு திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது. ஆனால் தற்போது திடீர் திருப்பமாக தமன்னா முக்கிய வேடத்தில் நடித்த ’பெட்ரோமாக்ஸ்’ என்ற திரைப்படம் தீபாவளி அன்று வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஈகிள் ஐ புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தமன்னா அதிரடி ஆக்சன் நாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படம் பிகில் மற்றும் கைதி ஆகிய இரண்டு பெரிய படங்களுக்கு இடையே தாக்குப் பிடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அப்துல் கலாமிடம் சொன்னதை நிறைவேற்றிய இசை அமைப்பாளர் ! அப்படி என்ன சொன்னார் ?