அப்துல் கலாமிடம் சொன்னதை நிறைவேற்றிய இசை அமைப்பாளர் ! அப்படி என்ன சொன்னார் ?

புதன், 18 செப்டம்பர் 2019 (20:43 IST)
’நானும் சிங்கில்’ தான் என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகப்போகிறவர் ஹித்தேஷ் மஞ்சுநாத். இவர்  பள்ளியில் படிக்கின்ற போது, முன்னாள் ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி அப்துல்கலாமிடம் தான் சொன்னதை நிறைவேற்றி உள்ளதாகக் கூறியுள்ளார்.
’நானும் சிங்கில்தான் ’ என்ற படத்தை இயகியுள்ளவர் அறிமுக இயக்குநர் கோபி. இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகவுள்ளவர் ஹித்தேஷ் மஞ்சுநாத். இவர் தான் பள்ளியில் படித்த போது, அப்துல்கலாம்  ஜனாதிபதி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
 
அந்த நிகழ்சியில் ஹித்தேஷ்  கீ போர்டு வாசித்துள்ளார். ஹித்தேஷின் திறமையைப் பார்த்த அப்துல் கலாம் அவரைப்   பாராட்டி ஒரு விருது கொடுக்கும்போது, நீ எதிர்காலத்தில் என்னவாகப் போகிறாய் என கேட்டுள்ளார். அதற்கு, நான் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் போன்று ஆகப்போகிறேன் என ஹித்தேஷ் பதிலளித்துள்ளார். 
தற்போது நானும் சிங்கில்தான் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளார் ஆகியுள்ள ஹித்தேஷ் அப்துல்கலாமிடம் சொன்னதை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் காப்பான்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்! சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு