Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடித்துவிட்டு ரகளை செய்த டாப்ஸி! நடிகரின் ஷாக்கிங் பேட்டி

Advertiesment
குடித்துவிட்டு ரகளை செய்த டாப்ஸி! நடிகரின் ஷாக்கிங் பேட்டி
, புதன், 8 மே 2019 (11:30 IST)
நடுராத்திரியில் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு நட்சத்திர ஹோட்டலில் ரகளை செய்த நடிகை டாப்ஸி. 


 
தமிழில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருதை பெற்ற திரைப்படம் ஆடுகளம், இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை டாப்ஸி.  மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தின் மூலம் நடிகை டாப்ஸி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து அஜித் நடித்த ஆரம்பம், லாரன்ஸ் நடித்த காஞ்சனா போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். 
 
மேலும்,தமிழ் தெலுங்கு மலையாளம் என்று பல்வேறு வேடங்களில் நடித்துள்ள இங்கு இவரால்  முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை எனவே பாலிவுட்கு பக்கம் பறந்தார். அக்கட தேசத்தில் அம்மணிக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால்  இந்தியில் படுபேமஸ் ஆனார்.
 
இந்த நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி  நிகழ்ச்சி ஒன்றில் டாப்சி,  இந்தி நடிகர் விக்கி கவுசல் பங்கேற்றனர். அப்போது டாப்ஸியிடம் குடிப்பழக்கம் பற்றி கேள்வி எழுப்ப ஆம் என அதனை ஒப்புக்கொண்டார். இதற்கு பதிலளித்த  விக்கி கவுஸ், ஒரு நாள் இரவு நட்சத்திர ஹோட்டலில் டாப்ஸி  ஓவராகக் குடித்துவிட்டு அந்த ஹோட்டலின் முன் பகுதியில் இருந்த புல்வெளியில் போய் செட்டில் ஆகிவிட்டார். போதை இன்னும் தலைக்கு ஏறியதால் இரவு இங்கேயே படுத்து உறங்கிவிட்டு நாளை காலை வீடு திரும்பலாம் என்று அடம்பிடித்ததார் என்று கூறி சிரித்தார். 

webdunia

 
இதுபற்றி டாப்ஸி கூறுகையில், படப்பிடிப்பை முடித்துவிட்டு ஹோட்டல் ஒன்றில் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது நான் அதிகமாக குடித்துவிட்டு ரகளை செய்தேன் பின்னர், விக்கி என்னை விட்டு சென்று விடுவேன் என்று கூறியதால் அங்கிருந்து நான் கிளம்பி வந்து விட்டேன். அன்று இருவருமே அதிக குடிபோதையில் இருந்தோம் அன்று நடந்ததை எண்ணி நான் மிகவும் சங்கடப்பட்டேன் என்று கூறி சிரித்தார் டாப்ஸி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

17 வயது பள்ளி மாணவி தேவை: அடல்ட் பட இயக்குனரின் விளம்பரம்