Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஹல்காம் தாக்குதல் இந்து - முஸ்லீம் பிரச்சனை அல்ல: நடிகை காஜல் அகர்வால்..!

Mahendran
சனி, 26 ஏப்ரல் 2025 (09:18 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம்  என்ற பகுதியில் கடந்த செவ்வாய் அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், இந்தியாவை மட்டும் இன்றி உலக நாடுகளையே அச்சுறுத்தி உள்ளது.
 
தீவிரவாதிகளை அடியோடு ஒழிக்க வேண்டும் என, இந்தியாவுக்கு உலக நாடுகள் கைகோர்த்து வருகின்றன.
 
இந்த நிலையில், நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களது கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
 
அந்த வகையில், நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ’பகல் காம்’ பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து பதிவு செய்துள்ளார்.
 
’இந்த பயங்கரவாத தாக்குதல், இந்து - முஸ்லீம் இடையிலான பிரச்சனை இல்லை. சில வெறுப்பாளர்கள் அதைத்தான் விரும்புகிறார்கள். இது பயங்கரவாதம் மற்றும் மனித நேயத்திற்கு இடையிலான மோதல்.
 
ஒரு மதத்தின் பெயரில் யாரையும் பிரிக்க வேண்டாம். பிரிவினை என்பது அதிக பயத்தையும், பிரிவு உணர்வையும் ஏற்படுத்தும். நாம் அனைவரும் ஒரே இனம் என்ற உணர்வு இருக்க வேண்டும். முன்பு இருந்ததை விட நாம் இன்னும் அதிகமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்று பதிவு செய்துள்ளார்.
 
அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வடிவேலு அண்ணன் அந்த மாதிரிக் கதாபாத்திரங்கள் எல்லாம் நடிக்கக் கூடாது’… சுந்தர் சி அட்வைஸ்!

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணையும் மலையாள நட்சத்திரப் பட்டாளம்!

’கில்லி’ பக்கத்தில் கூட வரமுடியாது.. ‘சச்சின்’ வசூல் இவ்வளவுதான்..!

விஜய்சேதுபதி மகனின் முதல் படம்.. ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு..!

‘மதகஜ ராஜா’ திரைப்படம் ஏன் இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை: படக்குழு விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments